நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இத்தேர்தலில், மொத்தமாக உள்ள 238 வாக்களிப்பு நிலையங்களில், சுமார் 200 வாக்களிப்பு நிலையங்களில் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டன.
இதில் கொன்சர்வேற்றிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஒன்றாரியோ மாநகரசபை உறுப்பினர் மைக்கல் பாரெட் 63 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆளும் லிபரல் கட்சியின் மேரி ஜீன் மக்ஃபோல் 32 வீதமான வாக்குகளையே பெற்றுள்ளார். ஏனையோர் மிகவும் குறைந்தளவான வாக்குகளையே பெற்றுள்ளனர்.
கிழக்கு ஒன்றாரியோவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கோர்ட் பிரவுண் கடந்த மே மாதம் காலமானார். அதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இந்த தேர்தல் நடத்தப்பட்டது.
இதேவேளை, ஆளும் கட்சியின் மீது காணப்படும் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக இத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருவதாக கருத்துக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன.