(தர்சன்)
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாலையடித்தோணா ஸ்ரீ முருகன் ஆலய மடப்பள்ளி அமைப்பதற்கு அடிக்கல் நடும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனினால் ஆலயத்திற்கு கம்ரலிய நிதி மூலம் ஒதுக்கப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாவில் மடப்பள்ளி அமைத்தல், ஆலயத்தை புனரமைத்தல் வேலைகள் இடம்பெறுகின்றது.
ஆலய தலைவர் எஸ்.புவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கி.சேயோன், ஆலய நிருவாகத்தினர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
கொட்டகை மூலம் அமைக்கப்பட்ட மடப்பள்ளி கிழே விழும் நிலையில் இருந்த நிலைமையில் இதனை புனரமைப்பதற்கு எமக்கு நிதி வழங்கிய பாராளுமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவிப்பதாக ஆலய தலைவர் எஸ்.புவனேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனினால் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 240 இலட்சம் ரூபா நிதியில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் வீதி புரமைப்புக்கு 120 இலட்சம் ரூபாவும், பாடசாலை மைதானங்கள் புனரமைக்க 50 இலட்சம் ரூபாவும், பாடசாலைகளின் மலசல கூடங்கள் அமைக்க 20 இலட்சம் ரூபாவும், ஆலயங்கள் புனரமைக்க 50 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.