சபாநாயகர் அலுவலகத்தினால் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாடாளுமன்ற சங்கம் மற்றும் பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தில் காணப்படும் நிலையியற்கட்டளைகளுக்கு ஏற்பவே இதுவரை நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு நபரையோ அல்லது குழுவையோ பலப்படுத்துவதற்காகவோ அல்லது பலவீனப்படுத்துவதற்காகவோ தாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
சரியான கொள்கையின்படியே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகளை எவராவது ஒரு தரப்பினர் ஏற்றுக்கொள்வதில்லை என்றால், தன்னையும் நாடாளுமன்றத்தையும் அவமதிக்காமல் சட்டப்பூர்வமாக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைத்து தன்னை நீக்க முடியும் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.