பிரான்ஸ் அரசால் மிகவும் மதிக்கப்படும் நினைவுச் சின்ன தூபியான ஆர்க் டி ட்ரியோம்ஃப் அருகே கடந்த கலகக்காரர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதுடன், அவர்களை வௌியேற்ற பாதுகாப்பு பிரிவினர் கண்ணீர் புகைத் தாக்குதல் மற்றும் நீர்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
இந்தநிலையில், சில அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஜனாதிபதி மக்ரோன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அந்த பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.
நேற்றையதினம் முகமூடி மற்றும் கருப்பு நிற ஆடை அணிந்த ஒரு பிரிவினர் மத்திய பாரிஸின் பல பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் சூறையாடியதுடன், வாகனங்கள் மற்றும் தனியார் இருப்பிடங்களில் கண்ணாடிகளுக்கும் சேதம் ஏற்படுத்தினர்.
அத்துடன் பொலிஸார் உட்பட பாதுகாப்பு பிரிவினருடன் கடுமையாக மோதினர். கடந்த 1968 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரான்ஸ் தலைநகர் கண்ட மிக மோசமான அமைதியின்மையாக இந்த சம்பவங்கள் கருதப்படுகின்றன.
இதுதவிர, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது 18 மாதகால ஆட்சியின் போது முகக் கொடுத்த மிக மோசமான சவாலாகவும் பார்க்கப்படுகிறது.