என் சாம்ராஜ்ஜியம்.
என் சாம்ராஜ்ஜியத்தை
புகை வளையங்கள்
மறைக்க முற்படும்போதெல்லாம்
என் உள்ளங்கைகளில்
வந்தமர்ந்துவிடுகின்றன
எதிர் நிலை
கோட்பாட்டு நடைமுறை
மேலும்
அனுமதிக்காத தவறுகள்
நான் மேகமாகி
இன்னும் இன்னும் முன்னேறுகிறேன்.
என் சாம்ராஜ்ஜியத்தை
கண்டடைவதில்
என் ருசி குறைவதாக இல்லை.
பல யாமங்கள் கடந்து
அறைக்கு வெளியே
பறவைகளின் விடிகாலை ஒலியும்
வாக்கியங்களாய் முழங்கப்படுகின்றன
அவ் ஒலியின் வயதுகளில்
கண்டடைய முயல்கிறேன்
என் சாம்ராஜ்ஜியத்தை.
அல்லது
பறவைகளின்
ஏதோ ஒரு ஒற்றை இறகில்
அது மறைந்திருக்கக் கூடும்
என்பதால்
நானும் பறவையாவ
திட்டமிட்டிருக்கிறேன்.
_ ஏ.நஸ்புள்ளாஹ்.