கடந்த மாதம் தொடக்கம் திட்டமிடப்பட்டு வந்த இந்த பயணம் தொடர்பில் தாம் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக அமெரிக்கா, கனடா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த விண்வௌி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
நாசாவைச் சேர்ந்த ஆன் மெக்லின், கனடாவின் விண்வௌி ஆய்வாளர்கள் டேவிட் செய்ன்ட்-ஜக்குயெஸ் மற்றும் ரஷ்யாவின் விண்வௌி வீரர் ஒலெக் கொனோனென்கோ ஆகியோர் கஸகஸ்தானில் உள்ள பைக்கனூர் விண்வௌி ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டனர்,.
கடந்த ஒக்டோபர் மாதம் முதன் முதலாக சர்வதேச விண்வௌி மையத்தின் பணிக்காக இரண்டு விண்வெளி வீரர்கள் செல்லவிருந்த நிலையில், தங்களது சோயுஸ் விண்கலம் செயலிழந்தபோது பயணத்தை ஆரம்பத்திலேயே கைவிட வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.