LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, December 23, 2018

இந்தோனேசிய சுனாமி அனர்த்தம் : உயிரிழந்தவர்களை அடையாளம் பணிகள் தொடர்கின்றன!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பின் பின்னர் ஏற்பட்ட பாரிய சுனாமி அலைகளை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்தது. அத்துடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக இருப்பதன் காரணமாக உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே, சுனாமி அலைகளால் பாதிக்கப்பட்ட ஜாவா மற்றும் சுமாத்ரா தீவுகள் இன்னமும் நீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில், அனாக் கரகட்டு எரிமலை தொடர்ச்சியாக குழம்புகளை வௌியிட்டு வருவதால் நீருக்கடியில் மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாக அதிகாரிகளை மேற்கோட்காட்டி ஊடகங்கள் இன்று செய்தி வௌியிட்டுள்ளன.

நூற்றுக்கணக்கான வீடுகளும், கட்டடங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னறிவித்தல்கள் விடுப்பதற்கு முன்னதாக சுனாமி தாக்கியதன் விளைவாக பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்களையும், உயிரிழந்தவர்களையும் அடையாளம் காணும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்தோனேஷிய அனர்த்த மேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்று மாலை 6 வரை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இரவு நேரத்திலும் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன. எனினும் சில பாதைகள் சேதமடைந்துள்ளதுடன், கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் தேடுதல் பணிகளை முன்னெடுப்பதில் கடின நிலை எதிர்நோக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணியாளர்களும், நோயாளர் காவு வாகனங்களும் எந்த தருணத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பசுபிக் நெருப்பு வளையத்தின் தீவுக் கூட்டங்களில் அமைந்துள்ள எரிமலைகள் இந்த வருடம் வௌிப்பட்டு வருகின்மையால் இது ஒரு எரிமலை வருடமாக கருதப்படுகின்றது.

அத்துடன் கடந்த ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் லம்போக் சுற்றுலா தீவுகளில் இரண்டு நிலநடுக்கங்களும் சுலாவெசி தீவில் செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற அனர்த்தங்களாலும் சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7