இன்று (06) திருகோணமலை கச்சேரியில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடரபாக தெளிவு படுத்தும் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றும் போது
மேற்குலக நாடுகள் சிலவற்றில் மத்திய அரசாங்கத்திற்கு அடுத்த படியான அதிகாரம் மிக்க கட்டமைப்புக்களாக விளங்குவது உள்ளுராட்சி மன்றங்களே அவ்வாறான உள்ளுராட்சி மன்றங்கள் பொது மக்களுக்கு தேவையான நல்ல பல தீர்மானங்களை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது.இந்நாடகளில் ஊழல் மற்றும் துஸ்பிரயோகங்கள் அறிதாகவே காணப்படுகிறது அவ்வாறு ஏற்பட்டாலும் கூட அவற்றுக்கான தண்டனைச் சட்டங்களும் கடுமையாக காணப்படுகின்றன.என தெரிவித்தார்.
தொடர்ந்து தேர்தல் ஆணைக்குழுவின் பணிகள் தொடர்பாகவும் அதன் பரிணாம வளரச்சி தொடர்பாகவும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெளிவு படுத்தினார்.இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தின் சகல உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அ . அச்சுதன்