மட்டக்களப்பு நகரில் புனர் வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்
புலிகள் கட்சியினால் முன்னெடுக்கவிருந்த பேரணி இடை நிறுத்தப்பட்டமை தொடர்பாக மக்களுக்கு தெளிவு படுத்தும்
ஊடகவியளாளர் சந்திப்பு கட்சியின் தலைவர் இன்பராசா தலைமையில்
மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச்
சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட சுட்டு
சம்பவத்துடன் புனர் வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள்
உறுப்பினர்கள் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்ற நிலையில்
இதனை மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் ,அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்தும்
நோக்குடன் இந்த தெளிவுபடுத்தும் பேரணி மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்க இருந்ததாக கட்சியின் ஊடக பேச்சாளர் ஜோன்சன் தெரிவித்தார்
மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கவிருந்த பேரணி இடை நிறுத்தப்பட்டமை தொடர்பாகவும் ,உயிரிழந்த பொலிஸ்
உத்தியோகத்தர்களுக்கும் ,அவர்களது குடும்பத்தாருக்கும் அனுதாபம் தெரிவிக்கும்
வகையிலும் புனர் வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினால் இந்த ஊடகவியளாளர் சந்திப்பு ஏற்பாடு
செய்யப்பட்டதாக கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்
இந்த
ஊடகவியலாளர்கள் சந்திப்பில் புனர் வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடக
பேச்சாளர் ஜோன்சன் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜினேஷ் மற்றும் கட்சி உறுப்பினர்கள்
கலந்துகொண்டனர்