LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, December 14, 2018

செயற்கை நுண்ணறிவு உரிய நெறிமுறையோடு இருப்பது அவசியம் : சுந்தர் பிச்சை யோசனை!

செயற்கை நுண்ணறிவு தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சையிடம், அமெரிக்க பிரபல பத்திரிகையொன்றினால் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட விஷயமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  அந்த நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது தொழிநுட்ப நிறுவனங்களின் பொறுப்பு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தான் புதுமையின் உச்சத்துக்கு தொழில்நுட்பத்தை அழைத்து செல்கின்றன. ஆளில்லா கார், நோய் கண்டறியும் கருவி ஆகியவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் இன்றியமையாத உபகரணங்களாக உள்ளன. அவற்றை கவனமாக கையாள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அவற்றை உருவாக்குவது மாத்திரம் பணியல்ல, சரியாக நெறிமுறைப்படுத்துவது அவசியமாகும்.

இது நீண்ட நாட்களுக்கு பயன்தரக்கூடிய விடயம் என்பதுடன், முறையான தொழில்நுட்பமாக மனிதனுக்கு எந்த இடத்திலும் பாதிப்பையோ, ஆபத்தையோ ஏற்படுத்தாத தொழில்நுட்பமாக இருக்க வேண்டும் என்று கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, எலான் மஸ்க் உள்ளிட்ட ஏனைய தொழில்நுட்ப நிறுவுனர்கள் ”செயற்கை நுண்ணறிவு, அணு ஆயுதங்களை விட ஆபத்து நிறைந்தது” என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகள் அவசியமானவை தான். அவை எந்தவொரு தீர்மானத்தையும் மனித கட்டுப்பாடு இல்லாமல் எடுக்கக்கூடாது என்பது போல வடிவமைக்கப்பட வேண்டும் என்று கூகுள் தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். அரசு அவற்றை நெறிமுறைப்படுத்த வேண்டும் என்பதுடன், சிலர் சொல்வதை போல மொத்தமாக செயற்கை நுண்ணறிவை தவிர்க்கவும் கூடாது.

மனிதவுயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்படாமல் இருக்க வேண்டும். அப்படி ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு அரசு நெறிமுறைகளை தளர்த்தக்கூடாது என்றும் சுந்தர் பிச்சை வலியுறுத்தியுள்ளார்.

சீனாவில் கூகுள் நிறுவனம் உருவாக்கவுள்ள தேடுபொறியில், சீன மொழியின் சர்ச்சையான வார்த்தைகள் புரியுமா, உதாரணத்துக்கு டியானன்மென் ஸ்கோயர் உயிரிழப்பு போன்ற வார்த்தைகள் புரியுமா என்று அவரிடன் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் “அநுமானிக்கப்பட்ட கேள்வி, நாம் அந்த நிலையில் இருந்து தொலைவில் இருக்கிறோம் “என்று பதிலளித்துவிட்டு சென்றுவிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7