பொட்டு அம்மான் உயிருடன் நோர்வேயில் இருக்கின்றார்- கருணாவின் பரபரப்பு தகவல்?
விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் சண்முகலிங்கம் சிவசங்கர் எனப்படும் பொட்டு அம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை, அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிங்கள பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் பொலிஸார் கொலை சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாக இருக்கலாம் என தெரிவித்த கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயுர் ஊட்டும் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி புட்டிகுடிபுரத்தில் உள்ள நந்திக்கடல் பகுதியில் சிவாசங்கர் என்ற புலிகளின் புலனாய்வு புலனாய்வுப் பிரிவின் பொட்டு அம்மான் கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் அவர் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை என்றும், பொட்டு அம்மான் நோர்வேயில் மறைந்து வாழ்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் புலனாய்வு பிரிவை செயலிழக்கச்செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் இதன் காரணமாவே விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்குவது காரணமாக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.