கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மேற்குலத்தவர்களுக்கும், புலம்பெயர் விடுதலை புலிகளின் அமைப்பினருக்கும் 2015ம் ஆண்டு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்ளவே இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட அவரது தரப்பினர்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தற்போது ஐக்கிய தேசிய கட்சியினரை பாதுகாக்கவும், அவர்களுக்கு ஆட்சியினை மீண்டும் பெற்று கொடுக்க பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி மீண்டும் தோற்றம் பெற்றாலே தங்களின் நோக்கங்கள் நிறைவேறும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.
கடந்த மூன்று வருட காலமாக அரசாங்கத்தின் ஆதரவுடன் வடக்கில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு கடந்த ஒரு மாத காலத்தில் தடையேற்பட்டமையினையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.
நாட்டை பிரிக்கும் அரசியலமைப்பினை உருவாக்கி தருகின்றோம் என்று ஐக்கிய தேசிய கட்சியினர் மேற்குலக நாடுகளுக்கும், புலம்பெயர் விடுதலை புலிகளின் அமைப்பினருக்கும் வாக்குறுதி வழங்கியுள்ளது. இவர்களின் முகவர்களாகவே எதிர்க்கட்சி என்ற பெயரில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்.
இதற்காகவே இவர்கள் இன்று ஜனநாயகம் பற்றி போலி கண்ணீர் வடிக்கின்றனர். ஐக்கிய தேசிய கட்சியினர் மீண்டும் ஆட்சியமைத்தால் நிச்சயம் நாட்டை பிரிக்கும் அரசியலமைப்பு உட்பட பல விடயங்கள் அரசியலமைப்பின் ஊடாகவே நிறைவேற்றப்படும்.
பல உயிர் தியாகங்களை செய்த இராணுவத்தினரது தியாகங்கள் அனைத்தும் அர்த்தமற்றதாகி விடும். ஆகவே எவ்வாறு பெரும்பான்மை மக்கள் அனைவரும் ஒன்றினைந்து பயங்கரவாத யுத்தத்தை வெற்றிக் கொண்டோமோ அதே போன்று இன்றும் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து தேர்தலின் ஊடாக எதிர் தரப்பின் சூழ்ச்சிகளை வெற்றிக் கொள்ள வேண்டும்“ என்றும் தெரிவித்துள்ளார்.