மிஸ்ஸிசாகாவில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், பீல் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சமர்வில்லி நீதிமன்றத்திற்கு அருகே குறித்த சடலம், நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நடைபாதையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த சடலத்தினை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், குறித்த சடலம் தொடர்பில் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.
எனினும், வாகனமொன்றில் சிக்கி குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு அருகிலுள்ள சி.சி.ரீவி காணொளிகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.