பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் முன்வைத்த அரசாங்க எதிர்ப்பு சீர்திருத்தங்களுக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாரிஸில் கடந்த நான்கு வாரங்களாக பிரான்ஸ் ஜனாதிபதி அறிமுகப்படுத்தியுள்ள உயர் கல்வி மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான புதிய முறைமை, மற்றும் பதிவுக் கட்டணம் அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தை அடுத்து இறுதியில் ஜனாதிபதி அறிக்கையை வெளியிட்டார்.
குறித்த அறிக்கையை ஏற்கொள்ளாத மாணவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பாடசாலைக்கு வெளியே தமது எதிர்ப்பினை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே yellow vest அமைப்பினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக பிரான்ஸ் அரசாங்கம் எரிபொருள் விலையேற்றத்திற்கான தமது யோசனையை மீளப் பெற்றுக்கொண்டது.
இதனை அடிப்படையாகக் கொண்டு தற்போது, உயர்கல்வி சீர் திருத்தத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பாரீஸ் நகர வீதிகளில் திரண்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பிரான்ஸ் அரசை கண்டித்து, வீதிகளில் பேரணியாக சென்றனர்.
இதேபோல் பிரான்சிஸ் தெற்குபகுதியில், மாண்ட்பெலியர் நகரில் திரண்ட மாணவர்கள், பேரணியாக சென்று, ஓரிடத்தில் கூடி, முழங்கால்படியிட்டு, கோஷங்களை எழுப்பி, பிரான்ஸ் அரசுக்கு நூதன முறையில் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.