விடுவிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் வெள்ளிக்கிழமை (30) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அனைத்து பாடசாலைகளுக்கும், மூன்றாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. எனவே மாணவர்களின் நலன் கருதி அவர்களின் விடுமுறை காலத்தினை மகிழ்ச்சியாக வீடுகளில் கழிக்க வேண்டும் என்பதால் தயவு செய்து கிண்ணியா நகர சபைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் இரண்டு வாரங்கள் கழித்து அதாவது டிசெம்பர் (15)ஆம் திகதிக்கு பிறகு பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
15 ஆம் திகதிக்குள் தனியார் வகுப்புகளை நடத்துவதாக முறைப்பாடுகள் நகர சபைக்கு கிடைக்கும் பட்சத்தில், அந்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
(அ . அச்சுதன்)