இருப்பினும் அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற விபரங்கள் வெளியாகாத நிலையில் சர்வதேச நெருக்கடி குழு இது குறித்து மின் அஞ்சல் ஒன்றினை அனுப்பியுள்ளது.
அத்தோடு கைது தொடர்பில்தகவலைப் பெற நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஒட்டாவாவில் உள்ள சீன தூதரகதிடம் வினவிய போதும் தகவல்களை வழங்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூவாவி நிறுவனரின் மகளும் அவர் நிறுவிய ஹுவாவி டெக்னோலஜீஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான 46 வயதான மெங்க் வான்சூ, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விதித்த தடைகளை மீறி ஈரானுக்கு தொலைதொடர்பு கருவிகளை விற்பனை செய்ததாக டிசம்பர் 1 ஆம் திகதி கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னணியிலேயே முன்னாள் கனடிய தூதர் மைக்கேல் கோவ்ரிக் கைது செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படப்பிடுகின்ற நிலையில், அதுகுறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை