LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, December 23, 2018

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் வடக்கில் நிவாரணப்பணிகள் முன்னெடுப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய வட.மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் விசேட வழிகாட்டலின் கீழ் வட.மாகாணத்திற்கான நிவாரண உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய வட.மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, கிளிநொச்சி பிரதேசத்தில் சுமார் 1,394 குடும்பங்களைச் சேர்ந்த 4,649 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கான தங்குமிட வசதிகள் 26 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், முல்லைத்தீவு பிரதேசத்தில் சுமார் 1,619 குடும்பங்களை சேர்ந்த 4,917 பேர் அளவில் 28 இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சுகாதார வசதிகள், உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் ஆகியவை மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் தன்னார்வ அமைப்புகளினால் வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கை இராணுவம், கப்பற்படை மற்றும் பொலிஸார் இதன்போது விசேட ஒத்துழைப்பை வழங்கி வருவதுடன், விமானப் படையினரும் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வட.மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பணிக்குழுவினர் வெள்ளப்பெருக்கு நிலைமை நீங்கும் வரை தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7