
நோர்த் கரோலினாவினைச் சேர்ந்தவர் பிரிட்னி ஹாலே. நோர்த் கரோலினாவிலுள்ள கிளார்க்ஸன் பல்கலைக்கழகத்தில் ஆக்குபேஷனல் தெரபி பிரிவில் பிரிட்னி ஹாலே முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்.
பிரிட்னி ஹாலேவுக்கு முதுகுத்தண்டுவடப் பிரச்சினை இருப்பதால், பிறவியில் இருந்து எழுந்து நடக்க இயலாது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக ‘கோல்டன் ரெட்ரீவர்’ இன நாய் ஒன்றை பிரிட்னி ஹாலே வளர்த்து வருகிறார். அதற்கு ‘கிரிஃபின்’ என்று பெயரிட்டுள்ளார்.
தான் வளர்க்கும் கிரிஃபின் நாய்க்கு பல்வேறு கட்டளைகளைக் சொல்லிக்கொடுத்து வளர்த்து வருகிறார். இதனால் பிரிட்னி சொல்வதை நாய் கிரிஃபின் தட்டாமல் கேட்டு, கீழ்ப்படிந்து நடக்கிறது.
காலை நேரத்தில் பிரிட்னியின் சக்கர நாற்காலியை தள்ளிச் செல்லுதல், வீட்டு வாயில் கதவைத் திறந்துவிடுதல், பிரிட்னியின் தொலைபேசியினை எடுத்து வருதல், புத்தகத்தை எடுத்து வருதல் என சின்ன, சின்ன பணிகள் அனைத்தையும் கிரிஃபின் செய்து வருகிறது.
மேலும், பல்கலைக்கழகத்துக்கு பிரிட்னி வரும்போது அவரைப் பாதுகாப்பாக அழைத்து வருதல், அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளையும் கிரிஃபின் செய்து வருகிறது.
இந்தக் காரணங்களால் கிரிஃபினுக்கு கௌரவப் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கிலுள்ள பாட்ஸ்டாம் அறக்கட்டளை சார்பில் கிரிஃபினுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதன்படி கிளார்க்ஸன் பல்கலை கௌரவப் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
