சில மலைக் கற்களும் தான் எஞ்சியுள்ளன
ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில்.
ஆயினும்
துடிப்பான தும்பிகளும்
சில பறவைகளும்
கூரான கற்களில் தங்கி பிரார்த்திக்கின்றன.
இரத்தம் நதியான தெருவில் இப்பொழுதும் நீந்தும்
விஷஜந்துகளின் கொடூரம் ஓய்ந்ததாய் இல்லை.
நாளை
உள்ள மண் பிட்டிகளும் துப்பாக்கியால் கரைக்கப்படுமோ?
மலைக் கற்கள் உருட்டப்பட்டுவிடுமோ?
பாலஸ்தீன மண்ணில்
பச்சிளம் குழந்தைகள் தவழ்ந்துகொண்டே இருப்பார்கள்
புறாக்கள் பறந்துகொண்டே இருக்கும்.