நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச வங்கி பிரதானிகளுடான சந்திப்பு உள்ளிட்ட முக்கிய கூட்டங்களை பிற்போட்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டளையை அடுத்து மகிந்த ராஜபக்ஷ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று காலை இரண்டாவது தினமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.(ந)
(கிண்ணியாச் செய்தியாளர்)