டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற அரச நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் இந்தியாவினது உதவியை பாகிஸ்தானுக்கு வழங்கத் தயார். இது தொடர்பான அனைத்து ஆலோசனைகளையும் இந்தியா வழங்கும்.
எல்லை தாண்டிய பங்கரவாதம் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையிலான பேச்சுவார்த்தை தடைப்பட்டு இருக்கின்றது.
பாகிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய இம்ரான் கான் தொடர்ச்சியாக இந்தியாவுடன் பேசுவதற்கு தயார் என்று கூறிவருகிறார். இந்தியா பேச்சுவார்த்தைக்கு தயாரகும்போது எல்லையில் தாக்குதலை பாகிஸ்தான் இராணுவம் மேற்கொள்கின்றது.
இந்நிலையில்தான் பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாகப் பயணிக்க முடியாது என இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.