இவர் fentanyl என்ற வலி நிவாரணி மருந்தை போதைக்காக பயன்படுத்தியதன் காரணமாக இறந்துள்ளதாக கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந் நிலையில் இவர் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்து சிகிச்சைப் பலனின்றி உயிர் இழந்ததாக கூறப்படுகின்றது.
மேலும் அவருடன் ரொறன்ரோ வெஸ்ட் மாடிக்குடியிருப்பில் தங்கியிருந்த வேறு ஒரு பெண்ணும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் எனவும் இருவரும் 30 வயது மதிக்கத்தக்கவர்கள் என்று போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதே வேளை குயின்- டஃபரின் வீதியில் உள்ள குறித்த மாடிக் குடியிருப்பில் அளவுக்கதிகமான வலி நிவாரணி அருந்திய சம்பவத்துடன் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருந்ததுடன் இரவு 8.20 அளவில் போலீசாருக்கு சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இது தொடர்பாக போலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகையில் எமது தட்டுங்கள்.com கனடா செய்தியாளரின் தகவலின்படி அண்மைக்காலமாக மிகப் பிரபலம் பெற்று வரும் கிரிமினல் வழக்கிற்கு பேர் போன சட்டத்தரணி பாலச்சந்திரன் சில வாரங்களுக்கு முன்னரே ஒரு தமிழ் அகதி கொலைவழக்கில் வாதாடி உயர் பதவி நிலை கனடா பொலிஸ்காரர் ஒருவருக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாகவே இந்த மரணம் நடந்திருக்கலாம் எனவும் பலர் பேசிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.இதற்கு வலு சேர்ப்பதாகவே "தமது மகன் வலி நிவாரண மருந்தை போதைக்காக பயன்படுத்துபவன் இல்லை" என்ற பாலச்சந்திரனின் பெற்றோரின் கருத்து அமைகிறது.