அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று முன்தினம் பேசுகையில்,
இந்தியாவுடன் பேச்சு நடத்த, பாக்., தயாராக இருப்பதாகவும், தங்கள் அழைப்பை ஏற்று, இந்தியா பேச்சு நடத்த முன் வர வேண்டும் என்றும்கூறினார்.
இந்நிலையில், இம்ரான் கானின் பேச்சுக்கு, நம் ராணுவ தளபதி, ஜெனரல் பிபின் ராவத் பதில் அளித்து பேசியதாவது:நம் நாட்டுடன் அமைதி பேச்சு நடத்த, பாக்., தயாராக இருப்பதாக, அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியிருப்பதை வரவேற்கிறேன். ஆனால், அது வெறும் பேச்சோடு நில்லாமல், செயல்வடிவத்திலும் இருக்க வேண்டும்;
இந்தியா,மதச்சார்பற்ற நாடாக திகழ்கிறது. ஆனால், பாகிஸ்தான், தன்னை, ஓர் இஸ்லாமிய நாடாகவே பிரகடனபடுத்தியுள்ளது.பாக்கில்,
பயங்கரவாதிகளுக்கு இடமில்லை என கூறி உள்ள இம்ரான் ,அந்த நாட்டை, ஒரு மத சார்பற்றதாக அறிவிக்கட்டும். அதன் பின் பேச்சு நடத்துவதில், எந்த பிரச்னையும் இருக்காது. அது போன்ற சமயங்களில், இரு நாடுகளும் இணைந்து செயல்பட எந்த தடையும் வராது. இவ்வாறு அவர் பேசினார்
கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கான், பாகிஸ்தானின் 22வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபின்னர் இந்திய பாக்கிஸ்தான் உறவுகள் அரசியல் மட்டத்தில் அல்லாது சமூக மட்டத்தில் சிரடைந்து வருகின்றன.