LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, December 23, 2018

விருதுகளைக் குவிக்கும் ‘பரியேறும் பெருமாள்’, ’96’ திரைப்படங்கள்!

சர்வதேச திரைப்பட விழாவில் ‘பரியேறும் பெருமாள்’, ’96’ சிறந்த திரைப்படங்களாக தேர்வு செய்யப்பட்டன.

சர்வதேச திரைப்பட விழா சென்னையில் 8 நாட்கள் நடைபெ்று வருகின்றன. ‘இந்தோ சினி அப்ரிசியேஷன்’ சார்பில் இந்த விழா நடைபெற்றது.

சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்ற வெளிநாட்டு திரைப்படங்களையும் திரையிட்டனர்.

இதில் தமிழ் படங்கள் வரிசையில் ‘பரியேறும் பெருமாள்’, ’96’, ‘அபியும் அனுவும்’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஜீனியஸ்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘இரும்புத்திரை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மெர்குரி, ராட்சசன்’, ‘வடசென்னை’, ‘வேலைக்காரன்’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

இதில் பரியேறும் பெருமாள், ’96’ ஆகியவை சிறந்த திரைப்படங்களாக தேர்வு செய்யப்பட்டன. ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை இயக்குநர்  பா.ரஞ்சித் தயாரித்து இருந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் சாதிபாகுபாடு அவலங்கள் பற்றிய கதையம்சத்தில் வந்திருந்தது.

இதன்போது, பா.ரஞ்சித்துக்கு 1 லட்சம் ரூபாயும், மாரி செல்வராஜுக்கு 2 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டன.

மேலும், ’96’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்து இருந்தனர். காதல் திரைப்படமாக  வந்தது, ரசிகர்கள் மனதில் பாடல் மூலம் சிறந்ததொரு இடத்தைப்பிடித்தது.

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் நந்த கோபாலுக்கும், இயக்குனர் பிரேம்குமாருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டன.

இதேவேளை, ‘வடசென்னை’ திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கும் சிறப்பு பரிசாக 1 லட்சம் ரூபாய்  வழங்கப்பட்டது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7