(தர்சன்)
மட்டக்களப்பு கல்குடா பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் 8 ஆவது பரிசளிப்பு விழாவும் காந்தள் சஞ்சிகை வெளியீடும் இன்று பாடசாலை அதிபர் க.கதிர்காமநாதன் தலைமையில் குகனேசன் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் திணகரன் ரவி,கொளரவ அதிதிகளாக பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான திருமதி.க.சிவசங்கரி, சி.துஸ்யந்தன், கோட்டக்கல்விப்பணிப்பாளர் நா.குணலிங்கம் ,கல்குடா பொலிஸ் பொறுப்பதிகாரி அனுரதேசப்பிரிய சுசந்த, மற்றும் ஹாம் சுற்றுலா விடுதி முகாமையாளர் சுசந்த பண்டார ஆகியோர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இதன்போது காந்தள் சஞ்சிகையானது வலயக் கல்விப்பணிப்பாளரினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள்,3 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் முகமாக நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது பாடசாலையின் அதிபர்.க.கதிர்காமநாதன் மற்றும் கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் திணகரன் ரவி ஆகியோர்கள் இங்கு சிறப்புரையாற்றினார்கள்.