தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் மற்றும் மெட்சல் மற்றும் ரங்காரெட்டி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவிலான நபர்கள் பன்றிக்காய்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவிக்கையில்,
“மொத்தம் 728 பேர் பன்றிக்காய்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 310 பேர் ஹைதரபாத், 137 பேர் ரங்காரெட்டி, 127 மெட்சல் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம், குளிர் மற்றும் மழை உள்ளிட்ட காரணங்களால் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும்.
தற்போது இதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் 21 பேர் பன்றிக்காய்சல் பாதிப்பால் உயிரிழந்தனர். இது முன்பை விட தற்போது அதிகளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த நோய் பாதிப்பானது தற்போது திடீரென அதிகரித்துள்ளது” எனக் கூறினார்.