ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவான 2.0 கடந்த வியாழன் (நவ.29) உலகெங்கும் 68 நாடுகளில் 15000 அரங்குகளில் வெளியானது. இந்தியப் படம் ஒன்று இத்தனை அரங்குகளில் வெளியான முதல் படம் 2.0 தான்.
இந்தப் படம் இதுவரை இந்திய ரூ 500 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. முதல் 5 நாட்களில் தமிழில் மட்டும் ரூ 112 கோடியும், இந்தியில் ரூ 111 கோடியும், தெலுங்கில் 81 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.
கேரளா மற்றும் கர்நாடகத்தில் இதுவரை எந்தப் படமும் செய்யாத வசூலைக் குவித்துள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘2.0’ திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. ஆனால் இதே படம் மீண்டும் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக வந்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆம், ‘2.0’ திரைப்படம் சீனாவில் விரைவில் 10 ஆயிரம் திரையரங்க வளாகங்களில் 56,000 ஸ்க்ரீன்களில் அதிலும் 47 ஆயிரம் 3டி ஸ்க்ரீன்களிலும் வெளியாகவுள்ளது. இந்த தகவல் லைகா நிறுவனத்தின் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘2.0’ திரைப்படம் ஏற்கனவே இந்திய ரூ.500 கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில் சீனாவில் மட்டும் ரூ.500 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மொத்தம் ரூ.1000 கோடி மைல்கல்லை இந்த படம் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் கோலிவுட் திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது