LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, December 16, 2018

உண்மை நண்பன் - 2 -46



(தொடர்ச்சி)
எதையும் சமனாகவும், சவாலாகவும் ஏற்று வாழும் மனப்பக்குவத்தை இறைவனிடம் நாம் கேட்டுப் பெறுவது நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு உறுதுணையாய் இருக்கும். ஏனெனில், வாழ்க்கை எனும் பயணத்தின் பாதையில் நாம் நன்மைக்கும், தீமைக்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கும், இன்பமும் வரும் துன்பமும் வரும். நமக்கு எது கிடைக்கிறதோ அதை ஏற்று வாழ நாம் முன்வர வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் நாம் கொண்டிருந்த வாழ்வு எம் நினைவில் வரவேண்டும். நன்மைகளை நாம் ஏற்று எப்படி வாழ்ந்தோமோ அப்படியே தீமைகள் குறுக்கே வரும்போது துணிவுடனும், தைரியத்துடனும் அதைக் கடந்து போக வேண்டும். பிறர் தவறுகளை மன்னிக்க வேண்டும், ஆனால் நடந்தவை பற்றி நினைவில் கொண்டிருக்க வேண்டும். நம் தவறுகள் தொடரும் நம் வாழ்வுக்கு ஆசான்களாக அமைய வேண்டும். எதுவும் மாறலாம், மக்கள் கூட மாறுகின்றவர்கள்தான், நிலையான போக்கில் யாரும் வாழ்வதில்லை. அதற்கு நாமும் விதிவிலக்கல்ல. ஒன்று மட்டும் நிச்சயம்! நம் பயணம் தொடர வேண்டும், அது தொடரும் என்பதுதான்.
நமக்கெல்லாம் முன்னோடியாக இறைமகன் கிறீஸ்து இருக்கிறார். அனைத்தின் மீதும் அதிகாரமும், கட்டுப்பாடும், வல்லமையும் கொண்டிருக்கிறார். அவ்வாறு தன் அதிகாரத்தைப் பேணுகின்ற உறுதியும், விசவாசமும் அவரிடம் இருக்கிறது. அதைத் தான் அவர் எம்மிடமும் எதிர்பார்க்கின்றார். அவரது எதிரிகள் மீதும் அவர் அதிகாரம் கொண்டிருந்தார். அவராக அவர்களுக்குச் சந்தர்ப்பத்தை வழங்கும் வரை, அவர்களால் அவரை எதுவுமே செய்ய முடியவில்லை. அவரைக் கொல்ல என்று கைது செய்தபோது கூட, யாருமில்லா வேளையில், அவர் தனித்திருந்தபோது, அதுவும் ஷநீங்கள் தேடி வந்த இயேசு நான்தான்| என்று தன்னை விட்டுக் கொடுத்ததினால்தான் அவர் மீது அவர்களனது கரங்கள் படிந்தன.
நமது வாழ்வில், நாம் நமக்கு விருப்பமானதைப் பெற்ற இன்புற்று வாழ விரும்பலாம். அது இயல்பானது, இயற்கையானது. ஆனால் அது நமக்கு உகந்ததா? என்பதை இறைவன் ஒருவரே அறிவார். எனவேதான் நமக்குத் தேவையானதை, உரியதை, உகந்ததை அவர் எமக்குத் தருகிறார். அதை நம் வாழ்வுக்காகப் பயன்படுத்திக் கொள்வதும், அதனாலே நன்மை காண்பதும் எம் கரங்களில்தான் தங்கியிருக்கிறது. நாம் நம் மனத்தால் விட்டுக் கொடுக்காதவரை, அவற்றால் நமக்கு எந்தத் தீங்கும் நமக்கு வரப்போவதில்லை. ஏனென்றால் இறைவன் அவற்றை எமது நன்மைக்காகவே வழங்குகிறார்.

ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7