நமது வாழ்வு நமக்குப் பழகி விட்டதொன்றாகவும் நம் எண்ணப்படி நமக்கு அனைத்தும் கிட்டுகின்றதொன்றாகவும் இருக்கின்ற பட்சத்தில் நம் வாழ்க்கை முறை சரிதான் என்கின்ற உணர்வில் நாம் தொடர்ந்தும் பயணித்துக் கொண்டேயிருக்கின்றோம். ஆனால் நம் வாழ்வின் போக்கு சரிதானா? நமக்கான வாழ்வை நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? அல்லது வேறொரருவரின் பாதச் சுவட்டில் நாம் நமந்து கொண்டிருக்கின்றோமா? என்றெல்லாம் நாம் எண்ணிப் பார்த்து நம் பாதையை, பயணத்தைத் திருத்திக் கொள்ளாதவரை நம்மால் நல்ல முடிவை அடையவே முடியாது.
விசேடமாக அரக்கப் பறக்க உழைக்கின்றோம், சொத்து சுகம் தேடுகின்றோம், வசதியாக வாழ்வை அமைத்துக் கொள்ளுகின்றோம், அழகிய மளைவி, அருமையான பிள்ளைகள் என்றெல்லாம் நம் வாழ்வு போய்க் கொண்டிருக்கலாம். ஆனால் அவiயெல்லாம் எது வரை என்று நாம் ஒரு கணமாவது சிந்தித்துப் பார்ப்பதேயில்லை. ஏதோ நம் வாழ்வ வெற்றியாகப் போய்க கொண்டிருக்கின்ற வரையில் அனைத்துமே சரியென்கிற உணர்வு நமக்கு. இருந்தும், எது வரை? என்கின்ற கேள்வியை எமக்குள் எழுப்பிப் பார்க்கின்றபோது, கண்ணில் தெரிகின்ற விடை அச்சத்திற்குரியதாகவே அமைகின்றது.
உலகாளும் அரசர், வார்த்தையாலே அனைத்தையும் உருவாக்கியவர், ஒரு பிடி நிலங் கூட சொந்தம் என்று உரிமை கொண்டாட முடியாதவராக, பொழியும் மழையும், எரி(றி)க்கும் வெயிலும் தாக்கதாபடி தலைக்கு மேலே கூரையில்லாத நிலையில் மந்தை மேய்க்கும் இடையரோடு, இரவல் கிடைத்த மாட்டுத் தொழுவத்தில், தீவனத் தொட்டியைக் கட்டிலாக்கிக் கொண்டு அன்னையின் கதகதப்பில், தாயன்பில் சுகம் காணுகிறாரென்றால் ...? நமக்கு சொந்தம் என்றிருப்பதை பட்டியல் போடுகின்றபோது நிச்சயம் சொத்து சுகங்களில் அவருக்கும் மேலானவர்களாய் நாமிருப்போம்| இல்லையா? ஆனால் அது நிஜமானதுதானா?
இதையெல்லாம் சீர் தூக்கிப் பார்க்கின்றதாக இந்த வருகைக் காலம் நமக்கு அமைகின்றது. இது வெறுமனே ஒரு நாள் கொண்டாட்டத்திற்கானது அல்ல. இது வாழ் நாளெல்லாம் மனதில் கொண்டு ஆடப்படும் நாளாக நம் வாழ்வில் அமைய வேண்டும். அவர் ஏழையாகப் பிறந்தார் என்பது மட்டுமல்ல, அகதியாகவும் இருந்தார். யாருமில்லா சூழலில் தாய் தந்தை தவிர யாரும் சொந்தம் சொல்ல அருகிலில்லை அவருக்கு. இருந்தும் அரசர்கள், ஞானியர்கள் அவரைத் தேடி வந்தார்களென்றால் .. ? அவர் எவ்வளவ மேலானவர். அப்படியானால் நாம்? நமது வாழ்வு? இந்த வருகைக் காலத்தில் ஒரு தடவை சிந்தித்துப் பார்ப்போமா? ஒரு நாள் வேண்டாம்,.. ஒரு மணி நேரம் வேண்டாம், .. சில நிமிடங்கள் போதும். இதயச் சுத்தியோடு நம்மை நாமே ஆராய்ந்தால் நம்மை மாற்றிக் கொள்ள நமக்கு எண்ணம் பிறக்கும். அதுதான் பிறக்கப் போகும் குழந்தை இயேசு கொண்டு வரும் வாழ்வாக இருக்கும்.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்