——— நமசிவாய வாழ்க ———
நல்லதும் கெட்டதும் அனுபவித்தேனே
நல்லதும் கெட்டதும் வெறுமனத் உள்ளதே
நல்லதும் கெட்டதும் நயம்பட உரைப்பவர்
நல்லதும் கெட்டதும் அறிந்திடுவாரோ?
இருளது என்பது ஒளியிலாஉண்மையே
குளிரது என்பதும் உணர்வதின் தன்மையே
அனுபவம் என்பது உணந்தறிந் தெளிவது
மானிடர் அனுபவம் தனிப்பெரும் உண்மையே
அனுபவம் என்பது ஆண்டவன் தந்ததா
ஆண்டவன் என்பதும் அறிந்துணர் உண்மையே
உண்மையின் தன்மையில் சீவனையாக்கி
அப்பெரும் தன்மையால் சிவன் பெற்றேனே...
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏