யாதுமான சிவனே மாதுமையின் பாகா
ஆதியந்தமில்லா சோதியான தேகா
தாயைவிட மேலாய் தரணியிலே நல்லாய்
சேயைவிட அன்பாய் தேனைவிட இனிப்பாய்
தீயைவிட நெருப்பாய் நீரைவிட குளிர்வாய்
காற்றை மிஞ்சும்வேகா தாழ்சடைய நாதா
நாளுமெந்தன் நினைவில் ஆடுமுந்தன் பாதம்
தாள்பணிந்து வணங்கி போற்றி நின்றேனே
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏