———- நமசிவாய வாழ்க ———-
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழக்கற்றுகொண்டு வாழும் பல வேடிக்கை மனிதர்கள் போல நாளும் அல்லல்பட்டு தேடிப் பணம் கொள்ள கோடிப்பாவங்கள் பிறப்பெடுக்க
நித்தம் கண்மூடித் திறந்து ஒடித்திரும்பவுமே அதனையே செய்து வாழ்ந்து
மடியும் வரை காலங்கடத்துவதே வாழ்கை என்றால் ....
உனக்காக நீ எப்போது வாழ போகின்றாய் என் அன்பு மனிதனே???
இனியாவது உன் சுயத்தை நீ வலிமையாக்கி உன் சிந்தனையை நீ தூய்மையாக்கி நிறைகொண்ட கருத்துக்களால் உன்னை நீயே நிரப்பி அன்றே உன்னை நீயே மீள் சலவை செய்து உன் கடிவாளத்தை நீயே உன் கையில் எடுத்துக்கொண்டு...
உன்னோடு நீ பொருதிப்பார்க்கும் அன்றைய நாளில் உன் மூளைக்கும் உன் இதயத்திற்குமான அப்போர் மிகவும் உக்கிரமாகும் அப்போது நீ உன் மனதிற்கு எஜமானாகி உன் மூளைக்கு அடிமையாகினால் இந்த சமூகத்தில் அங்கிகரிக்கப்படுவாய் என்பது மாற்று கருத்தில்லாத உண்மையே.
அப்போதாவது நீ உனக்காக வாழ்கின்றாயா?...
என்பதையும் சுயபரிசோதனை செய்துகொள் என் அருமை மனிதனே...
உனக்காக நீ வாழ இந்த சிவனடியானின் சிறு குறிப்பு......
கசப்பான நிகழ்வுகளை எரித்து முடித்துவிடு
இன்ப நிகழ்வுகளை மனக்கண் முன் வரவழைத்து
சோர்வும் தளர்வும் உன்னில் குடிகொள்ளும் போது மீட்டிப்பார்.
துன்பமும் விரக்தியும் கூடாரமிட என்றும் இடம் தராதே.
இயலாமையை உன் உள்ளே என்றும் நுழைய அனுமதிக்காதே.
இன்பங்களை யாவருடனும் பகிர்ந்து கொள்.
துன்பங்களைக் குழிதோண்டிப் புதைத்து விடு.
ஆக மொத்தத்தில் உனக்காக ஒரு நாள் வாழ்ந்துபார்
உனக்கு உன்னுள் உள்ள சிவம் நன்றாய் தெரியும்.
ஞானத்தின் முதிர்ச்சி என்பது மற்றவர்களுக்காக நாம் வாழ்வதை விடுத்து எம்மை நாமே நித்தம் செதுக்கி திருத்தி மெருகேற்றிக் கொள்வது என்பதுவே ஆகும்.
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏