பூசியவன் நீறதுவும் உடலில் முழுதாக
ஈசனவன் சிந்தனையும் மனதில் நிலையாக
பேசுமவன் விந்தையதும் எழுத்தில் விதையாக
வீசுமவன் வாசனைகள் கருத்தில் முளையாகும்
படைத்தவனை படித்தவனை பற்றியெழ நாளும்
தடைகளவை உடைத்தெறியும் பக்குவங்கள் ஆகும்
பகுத்தறிவும் மிகத்தெளிவும் என்னில் உரமேற
மெய்வடிவின் திருவடிகள் போற்றி இருப்பேனே!
வெய்யவினை அறுக்கும் எந்தன் பசுபதியின் நாமம்
பொய்யகற்றும் நோயகற்றும் உண்மை நிலையாகும்
உய்யவினை உடனமைக்கும் நானறிந்த உண்மை
மெய்வடிவின் திருவடிகள் போற்றி இருப்பேனே!
கைபடிய ஈசனவன் காரியங்கள் ஆற்றி
வெற்றியதும் தோல்வியதும் வேதனைகள் எல்லாம்
காலடியில் கர்மவினை யாவைகளும் கொட்டி
சிவன் பாதம் சரணாகின்றேன்!
நான்
சிவன் பாதம் சரணாகின்றேன்!
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான் 🙏