(ஜெ.ஜெய்ஷிகன்)
வாழைச்சேனை நல்லசமாரியன் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று(4) செவ்வாய்க்கிழமை காலை குகநேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
வணபிதா.கமால்டீன் சுனில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக முன்பள்ளிப் பணியக செயலாற்றுப் பணிப்பாளர் எஸ்.சசிகரன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி டீ.எஸ்.தனஞ்ஐய பெரமுன, மாவட்ட முதியோர் சம்மேளனத் தலைவர் கலாபூசணம், கந்தையா நடேசன் அவரது பாரியார் திரேசா நடேசன் மற்றும் பணியக வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி.கயல்விழி வினோதரன், அனுசியா ரவி, முன்பள்ளியின் தலைமைய ஆசிரியை திருமதி. சுனில் இயேசுராணி மற்றும் ஆசிரியைகள், நிருவாக உறுப்பினர்கள், பெற்றார்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இவ்வருடம் தரம் - 1 இற்கு செல்லும் மாணவர்களிள் விளையாட்டு, கலை மற்றும் போட்டி நிகழ்வுகளில் அதீத திறன்களை வெளிப்படுத்திய மாணவர்கள் நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் வாழைச்சேனை புனித திரேசாள் முன்பள்ளியில் 30 வருட முன்பள்ளி ஆசிரிய சேவை புரிந்து ஓய்வு நிலையிலுள்ள ஆசிரியை திருமதி. திரேசா நடேசன் ஆசிரியை கௌரவித்து பொன்னாடை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு அவரது மகத்தான சேவையை பாராட்டி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.