இத்திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை கிறிஸ்துமஸ் விருந்தாக எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியிட படகுழு தீர்மானித்துள்ளது.
மேலும் அதே திகதியில் விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’, ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’, விஷ்ணு விஷாலின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்களும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த 4 படங்களும் ஒரேநாளில் வெளியாகவுள்ளதால் திரையரங்குகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.