(குகா)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனினால் கம்ரலிய வேலைத் திட்டத்தின் மூலம் 26.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வேலைத் திட்டங்களுக்கு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அந்த வகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 265 இலட்சம் ரூபா நிதியில் அபிவிருத்தித் திட்டங்களாக வீதி புரமைப்புக்கு 160 இலட்சம், பாடசாலை மைதானங்கள் புனரமைக்க 50 இலட்சம், பாடசாலைகளின் மலசல கூடங்கள் அமைக்க 20 இலட்சம், ஆலயங்கள் புனரமைக்க 35 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் புதுக்குடியிருப்பு மாரியம்மன் வீதி, புதுக்குடியிருப்பு கலைவாணி அரங்கு முன் வீதி, பேத்தாழை கிருஸ்ணன் கோவில் வீதி, நாசிவந்தீவு காளி கோவில் வீதி, கண்ணன்கிராமம் தாமரைக்குளம் வீதி, கல்குடா காளி கோவில் வீதி, கிண்ணையடி விஸ்னு கோவில் வீதி, கும்புறுமூலை பன்னை வீதி என்பன 160 இலட்சம் ரூபாய் நிதியில் புனரமைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வாழைச்சேனை கைலாயபிள்ளையார் கோவில், வாழைச்சேனை திரேசா தேவாலயம், மருதநகர் பிள்ளையார் கோவில், புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம், கண்ணகிபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், கண்ணகிபுரம் ஸ்ரீ கணேஸ பெருமாள் ஆலயம்;, விநாயகபுரம் பேச்சியம்மன் ஆலயம் என்பவற்றுக்கு 35 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி வேலைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன
வாழைச்சேனை இந்துக்கல்லூரி, கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி, மீறாவோடை தமிழ் சக்தி வித்தியாலயம், சுங்காங்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, மயிலங்கரைச்சை வித்தியாலயம் என்பவற்றின் பாடசாலை மைதான புனரமைப்புக்கு 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் கருங்காலிசோலை ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலயம், கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் மலசலகூட அமைப்பதற்கு 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது சில இடங்களில் கம்ரலிய வேலைத் திட்ட அபிவிருத்தி வேலைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.