மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் செயற்பட இடைக்கால தடைவிதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, அடுத்த 24 மணி நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை தாம் எடுக்கவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று மாலை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவின்படி, தற்போது பிரதமரோ, அரசாங்க கிடையாது. அதற்கமைய, அடுத்த 24 மணி நேரத்துக்குள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை கூட்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(ந)
(ஏ.நஸ்புள்ளாஹ்)