சமகாலத்தில் இயங்கும் தீவிர இலக்கியத்தின் மும்மூர்த்திகள் என்றறியப்படும் ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரில் முதலாவதாக இவ்விருதை எஸ்.ரா பெறுவது இத்துறை சார்ந்தோருக்கும், இவர்களைப் பின்தொடர்பவர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் ஒரு விடயம் என்றே கூறவேண்டும்.
எஸ்.ரா எழுத்தாளராக மட்டுமில்லாமல், ஒரு தேசாந்திரியாகவும், விமர்கராகவும், திரைப்படக் கதாசிரியராகவும், பேருரைஞனாகவும், மிகச் சிறந்த கதைசொல்லியாகவும் திகழ்கிறார்.
எஸ்.ரா அவர்களின் கூற்று ஒன்றுண்டு. இவ்விருது அக்கூற்றுக்கு அடித்தளமாகிறது.
"பறவைகள் சிறகுகளால் மட்டும் பறப்பதில்லை. பறக்க வேண்டும் என்ற இடையறாத வேட்கையால் பறக்கின்றன. அதுதான் மூன்றாவது சிறகு"(ந)