LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, December 3, 2018

“கடற்கரை கரப்பந்து ஆளுநர் வெற்றிக்கிண்ணம் -2018”

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ் மாகாணத்தில் Beach Volleyball  விளையாட்டினைப் பரவலாக்கும் செயற்றிட்டத்திற்கமைவாக மாகாண சுற்றுலா பயணிகள் அதிகார சபையின்
அணுசரனையுடன், விளையாட்டுத்திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள “கடற்கரை கரப்பந்து ஆளுநர் வெற்றிக்கிண்ணம் -2018” நிகழ்வு இன்று( 03) திருகோணமலை  கடற்கரையில்  திருகோணமலைக்கான போட்டிகள் ஆரம்பமானது.இவ் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ்,பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபயகுணவர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்
 தொடர்ச்சியாக நாளை (04)  செவ்வாய்க் கிழமை வரையும் திருகோணமலை போட்டிகள்  இடம் பெறும்.

கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இப் போட்டிகள் இடம் பெற்று வருகின்றன  மாவட்ட மட்டம், மாகாண மட்டம் எனவும் பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக மாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஆண்கள் பிரிவுகளை டொண்ட 30 அணியினரும் 10 பெண்கள் அணிகளும் பங்குபற்றவுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் இறுதி மாகாண சுற்றுக்கு ஆண்கள் அணி 04 ம் பெண்கள் அணி 04 உம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மாவட்ட அடிப்படையிலும் இறுதிப் போட்டிகள் நடைபெற்று கிண்ணங்கள் வழங்கப்படும்.

29,30 ம் திகதிகளில் அம்பாறை மாவட்ட போட்டிகள் அட்டாளைச் சேனை கடற்கரையிலும் 3,4 ம் திகதிகளில் திருகோணமலை போட்டிகள் திருகோணமலை கடற்கரையிலும் இடம் பெறவுள்ளன . இறுதிச் சுற்றுப் போட்டியான மாகாண போட்டிகள்  திருகோணமலையில் எதிர்வரும் டிசம்பர் 06 ம் திகதி வியாழக் கிழமை வெகு விமர்சையாக இடம் பெறவுள்ளது. இறுதிப் போட்டிக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினையும் விளையாட்டுத்துறையினையும் மேம்படுத்தும் பொருட்டு குறித்த விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாகாணத்திலுள்ள விளையாட்டுக்கழகங்கள் கலந்து கொள்வதுடன், சுற்றுலா
மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களும் கலந்து கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத் திணைணக்கள கிழக்கு மாகாணப்  பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார்.

(அ . அச்சுதன்)

















 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7