பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் (நவம்பர் 29) வெளியானது.
இந்திய அளவில் அதிக பொருட்ச்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த படம் இந்திய சினிமாவின் அடுத்த கட்ட முன்னேற்றம் என்று புகழ்களை பெற்றுவருகிறது.
2.0 படம் என்றவுடன் நம் நினைவிற்கு முதலில் வருவது சிட்டி தான். இந்த படத்தில் சிட்டி ரீ-என்ட்ரி ஆகும் காட்சிகள் திரையரங்கில் விசில் பறக்க வைத்தது. அதே போல இந்த படத்தின் இறுதி காட்சியில் 3.0 சிட்டி என்ற சிறு வடிவிலான ரோபோவும் வருகிறது. மிகவும் சிறு உருவத்தில் ரஜினி செய்யும் சேட்டைகள் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் 3.0 வரும் கட்சிகளின் சில க்ளிப்பிங்கை இந்த படத்தின் வில்லன் நடிகர் அக்ஷேய் குமார் பகிர்ந்துள்ளார்.