லீ லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள செடார்ஸ்-சினாய் மருத்துவ நிலையத்தில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீ சமகால காமிக் புத்தகத்தின் வடிவமைப்பாளராக பரவலாக கருதப்பட்டார். 1960 களில் தொழில் நுட்பத்தை புதுப்பித்து, இளைய வாசகர்களால் விரும்பப்பட்ட ஆடைகளையும் நடவடிக்கைகளையும் அளித்ததன் மூலம்இ நவீன தொழில்நுட்பங்கள்,கல்லூரி-நிலை உரையாடல், நையாண்டி, அறிவியல் புனைகதை, தத்துவங்கள் ஆகியவற்றை காமிக்ஸ் உலகத்தில் அறிமுகப்படுத்தினார். பெண்டாஸ்டிக் போர்(Fantastic Four), ஹல்க், ஸ்பைடர் மேன், அயர்ன் மேன் போன்ற ஹீரோக்களை தோற்றுவித்தார்.
தனது 60 வயதிலேயே அவென்ஜர்ஸ் மற்றும் எக்ஸ்-மென் உள்ளிட்ட பெரும்பாலான மார்வெலின் சூப்பர் ஹீரோ காமிக்ஸை லீ எழுதினார். 1972 ஆம் ஆண்டில் அவர் மார்வெலின் வெளியீட்டாளர் மற்றும் தலைவராக ஆனார், அதன் பின்பு நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு, ஸ்பைடர் மேன் 72 மில்லியன் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டன.
லீயின் கதாபாத்திரங்கள் வட அமெரிக்க திரையரங்குகளில் கூ 130 மில்லியனுக்கும் அதிகமாக சம்பாதித்தது.
ஸ்பைடர் மேன் 2002 ல் 400மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக சம்பாதித்ததை இங்கு குறிப்பிடலாம்.