மாணவர்களுக்கு அரசியல் தெரிய வேண்டும். அரசியல் தெரிந்தால் தான் நல்ல தலைவர்களை தேர்வு செய்வார்கள் என்றும் பா.ம.க. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்பதோடு அது அனைவருக்கும் இலவச கல்வியை கொடுக்கும் எனவும் சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்ற பா.ம.க. மாணவர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
அத்தோடு தற்போதைய அரசு கல்விக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்குகிறது. பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக 90 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கு எனவும் என்று மேலும் கூறினார்.
தற்போதைய ஆட்சியாளர்கள் 3 ஆயிரம் பள்ளிகளை மூடுவதாக அறிவித்தததை சுட்டிக்காட்டிய அவர் காமராஜர் 6 ஆயிரம் பள்ளிகளை திறந்து வைத்து, மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்ததையும் நினைவு கூர்ந்து கொண்டார்.
மாணவர்கள் புரட்சியால் பல்வேறு நாடுகளின் அதிபர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்றும் தமிழகத்தில் 1965-ல் மொழிப்போர் போராட்டத்தில் ஏற்பட்ட மாணவர் புரட்சியால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது எனவும் தனது உரையில் குறிப்பிட்ட அவர் ஊழல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆண்டது போதும். இதை மாணவர்கள் மக்களிடம் எடுத்து கூற வேண்டும் எனவும் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் மாணவர்களிடம் பேசுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் ஒரு அமைதி புரட்சி நிலவி வருகிறது என்பதையும் எதிர்வு கூறிய அவர் மக்கள் பா.ம.க.வை ஆட்சியை எதிர்பார்க்கின்றனர் என்றும் தெரிவித்தார்.