இச்சந்திப்பின்போது இஸ்தான்புல் சவுதி தூதரகத்தில் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி படுகொலை செய்யப்பட்டது குறித்தும் யெமன் போரில் சவுதியின் பங்களிப்புக்கு குறித்தும் இளவரசருடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலைக்கு உத்தரவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சவுதி இளவரசருடனான தெரசா மே யின் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி இளவரசருடனான சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ள பிரதமர் ஊடகவியலாளரின் படுகொலை குறித்தும் யெமன் போர் குறித்தும் பிரித்தானியாவின் நிலையை இப்பேச்சுவார்த்தையின்போது இளவரசருக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
ஊடகவியலாளரின் படுகொலைச் சம்பவத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாகவும் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகவும் ஒரு முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என சவுதி இளவரசரை வலியுறுத்தவுள்ளதாக பிரதமர் கூறினார்.
யெமன் பொறி குறித்து கருத்துத் தெரிவித்த தெரசா மே “நாங்கள் தொடர்ந்து யெமனில் நிலவும் மனிதாபிமான நிலைமை பற்றி கவலை கொண்டுள்ளோம் அதனால் நீண்ட கால தீர்வு ஒன்றுக்கு வழிவகுக்குமாறு சவுதி அரசரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.