LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, November 6, 2018

E.CO நிறுவனத்தின் அனுசரனையில் யாழ் மாநகரில் மாதிரி SMART LAMP POLE

யாழ் மாநகர எல்லைக்குள் 17 இடங்களில் SMART LAMP POLE அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆரம்ப கட்டமாக எடுத்துக்காட்டாக யாழ் நகரில் மின்சார நிலைய வீதியில் (தனியார் பஸ் சேவைகள் இடம்பெறும் இடத்தில்) மாதிரி SMART LAMP POLE ஒன்றை e.co நிறுவனம் அமைத்துள்ளது. இதனை நேற்றைய தினம் (2018.11.05) மாலை 7.00 மணியளவில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் e.co நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இச் சேவைக்காக மாநகரின் அனுமதியை மாநகரசபையிடம் கோரியிருந்த நிலையில் அதன் சாதக பாதக நிலைமைகளை பரீட்சித்துப் பார்ப்பதற்காகவே முதற்கட்டமாக இது அமைக்கப்பட்டது.

இதனை ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து கிறீன்கிறாஸ் விடுதியில் இது தொடர்பான விளக்கமளிப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் மாநகர முதல்வர் , பிரதி முதல்வர், மாநகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர்கள், e.co நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர், பிராந்திய பொறுப்பாளர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன், இத் திட்டம் தொடர்பான விளக்கங்களும், தெளிவுகளும் மாநகரசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

 உறுப்பினர்களின் கேள்விகளுக்கான தெளிவுகளும் நிறுவன பொறுப்பாளர்களினால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதன் முன்மொழிவுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலான முன்மொழிவுகளை மாநகர சபைக்கு சமர்ப்பித்ததும் அது தொடர்பாக கலந்துரையாடி, சபையில் முடிவு செய்த பின்னர் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படும் என்றும், யாழ் மாநகர மக்கள் பயன் பெறும் வகையிலும் மாநகரசபைக்கு பாதிப்பில்லாத வகையிலும், தங்கள் நிறுவனத்திற்கு பாதிப்பில்லாத வகையிலும் இதன் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக ஆராய்வோம் என உறுப்பினர்களினால் கருத்து வெளியிடப்பட்டது. இம் மாதிரியை உதாரணமாகக் கொண்டு மாநகர எல்லைக்குள் SMART LAMP POLE அமைப்பதற்காக 17 முக்கிய இடங்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாநகர முதல்வரின் கோரிக்கைக்கு அமைய இந் நிறுவனத்தின் இத் திட்டத்தில் முதல் முறையாக இலங்கையில் யாழ்ப்பாணத்திலேயே SMART LAMP POLE இல் 3 மின் விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். மாநகரை அழகுபடுத்தும் மற்றும் அபிவிருத்தியடையச் செய்யும் செயற்பாடுகளை மக்களுக்கும், சூழலுக்கும் பாதிப்பில்லாத வகையில் முன்னெடுப்பதில் யாழ் மாநகரசபை பின்நிற்காது என்பதே முதல்வர் உட்பட உறுப்பினர்களினதும் கருத்தாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7