இறக்கும் போது இவருக்கு வயது 89.
அமரர் வணசிங்கா அவர்கள் சூசையப்பர் கல்லூரி அதிபராக கடமையாற்றிய காலப்பகுதி குறைவாயினும் குறித்த 87,88,89 ஆண்டு காலப்பகுதி ஈழத்தமிழர் வாழ்வில் முக்கியமான காலகட்டமாகும்.
வடக்கு கிழக்கு மண் இந்திய ராணுவ ஆக்கிரமிப்பிற்குட்பட்டிருந்த காலங்கள் அவை.
அதிபர் வணசிங்கா அவர்களின் போர் குணாம்ச ஆளுமை வித்தியாசமானது.எதனையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்வார்.
இயற்கையிலேயே அமைதியான சுபாவம் கொண்ட அவர் மிக மென்மையானவர். இவரது காலத்தில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலிருந்து அதிகளவான மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றது குறிப்பிடத்தக்கது திருகோணமலை மண்ணின் கல்வி வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமானது அன்னாருக்கு திருகோணமலை கல்வி சமூகம் தமது அஞ்சலிகளை செலுத்துகிறது.