சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவந்த மூன்றாம் வருட மாணவர்கள் மூவர் இன்று காலை "பஹன்துட எல்ல" எனும் இடத்தில் நண்பர்களோடு அருவியில் குளிக்கச் சென்ற நிலையில், பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது அனர்த்தத்தில் 25 வயதான செல்வரெட்ணம் நிஷாந்த், 25 வயதான கோபாலகிருஷ்ணன் சாரங்கன் , 23வயதான சரவணபவன் கோபிஷன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டில் பயிலும் மாணவர்களே நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக பொலீஸ் ஊடக பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவுத்துள்ளனர். இதற்கு முன்னரும் அழகான, அபாயகரமான இவ்விடத்தில் இரண்டு மாணவர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது