பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் வங்கியில் ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக கூடுதலாக ஒரு மாத சம்பளம் அரசு உழியார்களுக்கு அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது
பஞ்சாப் மாநிலத்தில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அக்டோபர் மாதம் சம்பளமாக இரு மடங்கு சம்பளம் தங்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதை கண்டு அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக ஒரு மாத சம்பளம் செலுத்தியுள்ளனர் என ஊழியர்கள் மகிழ்ந்தனர்.
ஆனால், வங்கியில் ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக கூடுதலாக ஒரு மாத சம்பளம் செலுத்தப்பட்டது என அறிவிக்கப்பட்டு கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை எடுக்க வேண்டாம் என அரசு ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே என அரசு ஊழியர்கள் புலம்பியபடி தங்களது வேலையை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.