ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனாவிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் பரஸ்பரம் புகார் எழுப்பினர்.
இந்நிலையில் மனீஷ் குமார் சின்ஹா நாக்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்
ராகேஷ் அஸ்தானா மீதான புகாரை மணீஷ் குமார் சின்ஹா தலைமையிலான சிபிஐ குழு விசாரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் மனீஷ் குமார் சின்ஹா நாக்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இடமாற்ற உத்தரவுக்கு எதிராக
மனீஷ் குமார் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் ராகேஷ் அஸ்தானாவிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி மணிஷ் குமார் சின்கா மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தன்னுடைய இடமாற்றத்திற்கு எதிராக மணிஷ் குமார் சின்காவும் சுப்ரீம் கோர்ட்டு சென்றுள்ளார்.
நவம்பர் 20-ம் தேதி அலோக் வர்மாவின் வழக்கு விசாரணைக்கு எடுக்கும் போது என்னுடைய வழக்கையும் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மத்திய அமைச்சருக்கு சில கோடி
சிபிஐயின் விசாரணை வளையத்திற்குள் இருந்த தொழில் அதிபருக்கு சாதகமாக செயல்பட மத்திய அமைச்சர் சில கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என்று மணிஷ் குமார் சின்கா கூறியுள்ளார். என்னிடம் இருக்கும் ஆவணங்களை வெளியிட்டால் கோர்ட்டு அதிர்ச்சியடையும் எனவும் தெரிவித்துள்ளார். விசாரணையை திசைத்திருப்பவும், ராகேஷ் அஸ்தானாவிற்கு உதவி செய்யவும் என்னை இடமாற்றம் செய்துள்ளனர் என்று மணிஷ் குமார் சின்கா கூறியுள்ளார்.
இதற்கிடையை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற அவருடைய கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, “எங்களை எதுவும் அதிர்ச்சியடைய செய்யாது,” என கூறியுள்ளது.
இதனைவிடவும் அன்மையில் மத்திய நிதித்துறை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ’ஸ்டெர்லைட் ஆலை என்னிடம் டீல் பேசி அவர்கள் அணுகியபோதும், தேர்தல் செலவுக்காக எனக்குப் பணம் கொடுத்தபோதும் மறுத்து விட்டேன்’ எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக, நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரம்மா, மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் பொதுத் தகவல் அலுவலருக்கு சரமாரியான கேள்விகளில் ’’மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற செய்தி, ஸ்டெர்லைட் நிர்வாகத்தைச் சேர்ந்த நபர்கள் மீது அமைச்சர் எடுத்த நடவடிக்கை மற்றும் கொடுத்த புகார் மனு நகல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதும் கவனிக்கப்பட வேண்டியது.