ஸ்கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாள்
திருக்கல்யாண விசேட பூஜை நிகழ்வு மட்டக்களப்பு செல்வநாயகம் வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது
மட்டக்களப்பு நகரில் இருதயபுரம்
செல்வநாயகம் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ
சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று
திருக்கல்யாண விசேட பூஜை நிகழ்வுகள் இன்று மாலை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ தயாபர சர்மா தலைமையில் திருக்கல்யாண உற்சவகுருக்களான சாதகஜோதி
சத்யோஜாத சிவாச்சாரியார் சிவபிரம்ம ஸ்ரீ இ சரவணபவன் குருக்கள் , தெவீக
கிரியாபணி சத்யோத சிவாச்சாரியார் சிவஸ்ரீ கு . நல்லராசா குருக்கள் ஆகியோரினால் ஸ்கந்த சஷ்டி விரதத்தின்
திருக்கல்யாண வைபவ விசேட பூஜை நிகழ்வுகள் நடைபெற்றது
மட்டக்களப்பு செல்வநாயகம் வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிர்வாக சபையின்
ஏற்பாட்டில் நடைபெற்ற ஸ்கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாள் திருக்கல்யாண விசேட பூஜை
நிகழ்வில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்