LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 21, 2018

ஓவியத்தின் நிழல்



தனக்கு மிகவும் விருப்பமான
இரண்டு முயல்களை
ஓவியமாக வரைந்து தரும்படி
அவாவுறுகிறாள் ஹயா
கறுப்பு நிறத்தில் ஓன்றையும்
வெள்ளை நிறத்தில் மற்றதையுமென
கட்டளையும் போடுகிறாள்
எனக்கு ஓவியம் வரைவது
சற்றும் பரிட்சயமானதாக இருக்கவில்ல
இருந்தும் அவளது ஓயாத
நச்சரிப்பை சமாளிக்கவென
வெள்ளை நிறத்தில
முயலொன்றினை முடிந்தளவு வரைந்து
ஹயாவிடம் கொடுக்கிறேன்
அவள் கறுப்பு முயலையும்
வரைந்து தரும்படி அடம் பிடிக்கிறாள்
ஓவியம் வரைந்த தாளில்
பகல் பொழுதினையும் வரைகிறேன்
இப்போது முயலின் நிழலினை காட்டி
இதுதான் கறுத்த முயலென்றேன்
அவள் ஏற்றுக்கொண்டாள்
இருந்தும் இரவு வந்துவிட்டால்
நிழல் மறையும்  சாத்தியமிருக்கிறது
உடன் ஔியை உதிர்க்கவென
சில மின்மினிப் பூச்சிகளை
அங்குமிங்குமாக வரைந்து விடுகிறேன்
வரைந்த ஓவியத்தின்
நிழலின் நிறம் கறுப்பென்பதனால்
இனி எப்போதும் கறுப்பு வெள்ளையென
இரண்டு முயல்கள் இருக்கும்

0
ஜமீல்



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7